Thursday, 15 March 2018



ஜெயமினி  ஜோதிடமுறையும் தாரகாரகனும் :

பொதுவாக ஜோதிடத்தில் காலபுருஷ தத்துவத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தனித்துவம் வாய்ந்த காரகங்களை கொண்டுள்ளது.உதாரணத்திற்கு..

சூரியன் - தந்தை,மகன்,ஜனாதிபதி,முதல்வர்,அரசர்,அரசாங்கம்..

சந்திரன் - அம்மா, பெண், மாமியார், கலைஞர்கள், ஹோட்டல் தொழில், பால் பண்ணை, ஆடம்பரமான பொருட்கள்,பயனங்கள், விவசாயம், கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல்,கலை ,விவசாயம் ..

செவ்வாய் - இளைய  சகோதரம் , கணவன், போலீஸ், பாதுகாப்பு படை, பொறியாளர், விளையாட்டு வீரர், தொழிற்சங்க தலைவர்,அறுவ சிகிச்சை மருத்துவம், விவசாயம், புருவம், பற்கள், இரத்தம்,தைரியம்,வீரம்..


இதே போல், புதன் - கல்வி அறிவு,ஜோதிடம் 
சுக்கிரன் - மனைவி, ஆடம்பரம்...
குரு - ஆசிரியர் , பிராமணன்,கோயில், கடவுள் பக்தி,கோயில் பூஜை செய்பவர்..

 இதே போல் சனி,ராகு, கேது போன்றவைகளுக்கும் தனித்துவம் வாய்ந்த காரகங்கள்  உள்ளன.

ஜெயமினி ஜோதிடத்தில் கிரகங்களின் டிகிரி அளவை பொறுத்து 7 காரகங்களாக கிரகங்கள் பிரிக்கப்படுகிறது.இவற்றில் ராகு,கேது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது ஏனெனில் அவை நிழல் கிரகங்கள் என்பதால்.

ஜெயமினி ஜோதிடப்படி ஒவ்வொருவரின் ஜெனன ஜாதகப்படி இந்த காரக கிரங்கள் மாறும் இவற்றை விரிவாக பார்ப்போம்.

1. ஆத்ம காரகன் - அதிகப்பட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம்..

ஆத்மகாரகன் லக்கினாதிபதியை போன்றவன்.உங்களுடைய ஆன்மா,உடல் வாகு,ஆயுள் போன்றவற்றை குறிக்கும்.

2. அமத்திய காரகன் - 2 வது அதிகப்பட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம்..
உங்களுடைய செல்வம்,வேலைவாய்ப்பு,தொழில்,தலைமைப்பண்பு 
அறிவுசார்ந்த விசயங்களை குறிக்கும் .மேலும் 2 வது  மற்றும் 10 வது  வீட்டுக்குரிய காரகங்களை குறிக்கும்.

3. பத்திரி காரகன்  - 3 வது அதிகப்பட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம்..

3 வது  மற்றும் 9 வது  வீட்டுக்குரிய காரகங்களை குறிக்கும்.


4. மாத்ரு  காரகன்  - 4 வது அதிகப்பட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம்..

4 வது    வீட்டுக்குரிய காரகங்களை குறிக்கும்.


5. புத்ர  காரகன்  - 5 வது அதிகப்பட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம்..

5 வது    வீட்டுக்குரிய காரகங்களை குறிக்கும்.

6. ஜனத்தி   காரகன்  - 6 வது அதிகப்பட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம்..

6,8,12 வது    வீட்டுக்குரிய காரகங்களை குறிக்கும்.


7. தார காரகன்   - 7 வது அதிகப்பட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம்..அல்லது மிகவும் குறைந்தபட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம் 

திருமணத்தை குறிப்பவன்.மனைவியின் ஆன்மாவை குறிப்பவன்.இந்த கிரகத்தின் குணநலன்களை கொண்டு மனைவியின் குணநலன்களை சுலபமாக கணிக்கலாம்.

உதாரண ஜாதகத்தில்..



1.ஆத்மகாரகன் -  சுக்கிரன்
2.  அமத்திய காரகன்-  சனி
3. பத்திரி காரகன்- சந்திரன்
4. மாத்ரு  காரகன்- செவ்வாய்
5. புத்ர  காரகன் - புதன்
6. ஜனத்தி   காரகன் - குரு
7. தார காரகன் - சூரியன் 

தார காரகன் - சூரியன்:

இந்த ஜனன ஜாதக படி சூரியனுடைய குணநலன்களை கொண்டவள் மனைவியாக வாய்ப்பாள்.மனைவி தலைமைப்பண்பு கொண்டவள்,உஷ்ண தேகம் கொண்டவள்,மேலும் கடினமான உழைப்பாளிகளான இவர்கள் அரசாங்கத்துடன் இணக்கமாக நடந்துக்கொள்வர். 

இதே போன்று ஒவ்வொருவரின் ஜாதகத்தில் இந்த ஜெய்மினியின் காரக கிரகங்கள் மாறுபடும்.

நன்றி..

கார்த்திக்