ஜெயமினி ஜோதிடமுறையும் தாரகாரகனும் :
பொதுவாக ஜோதிடத்தில் காலபுருஷ தத்துவத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தனித்துவம் வாய்ந்த காரகங்களை கொண்டுள்ளது.உதாரணத்திற்கு..
சூரியன் - தந்தை,மகன்,ஜனாதிபதி,முதல்வர்,அரசர்,அரசாங்கம்..
சந்திரன் - அம்மா, பெண், மாமியார், கலைஞர்கள், ஹோட்டல் தொழில், பால் பண்ணை, ஆடம்பரமான பொருட்கள்,பயனங்கள், விவசாயம், கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல்,கலை ,விவசாயம் ..
செவ்வாய் - இளைய சகோதரம் , கணவன், போலீஸ், பாதுகாப்பு படை, பொறியாளர், விளையாட்டு வீரர், தொழிற்சங்க தலைவர்,அறுவ சிகிச்சை மருத்துவம், விவசாயம், புருவம், பற்கள், இரத்தம்,தைரியம்,வீரம்..
இதே போல், புதன் - கல்வி அறிவு,ஜோதிடம்
சுக்கிரன் - மனைவி, ஆடம்பரம்...
குரு - ஆசிரியர் , பிராமணன்,கோயில், கடவுள் பக்தி,கோயில் பூஜை செய்பவர்..
இதே போல் சனி,ராகு, கேது போன்றவைகளுக்கும் தனித்துவம் வாய்ந்த காரகங்கள் உள்ளன.
ஜெயமினி ஜோதிடத்தில் கிரகங்களின் டிகிரி அளவை பொறுத்து 7 காரகங்களாக கிரகங்கள் பிரிக்கப்படுகிறது.இவற்றில் ராகு,கேது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது ஏனெனில் அவை நிழல் கிரகங்கள் என்பதால்.
ஜெயமினி ஜோதிடப்படி ஒவ்வொருவரின் ஜெனன ஜாதகப்படி இந்த காரக கிரங்கள் மாறும் இவற்றை விரிவாக பார்ப்போம்.
1. ஆத்ம காரகன் - அதிகப்பட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம்..
ஆத்மகாரகன் லக்கினாதிபதியை போன்றவன்.உங்களுடைய ஆன்மா,உடல் வாகு,ஆயுள் போன்றவற்றை குறிக்கும்.
2. அமத்திய காரகன் - 2 வது அதிகப்பட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம்..
உங்களுடைய செல்வம்,வேலைவாய்ப்பு,தொழில்,தலைமைப்பண்பு
அறிவுசார்ந்த விசயங்களை குறிக்கும் .மேலும் 2 வது மற்றும் 10 வது வீட்டுக்குரிய காரகங்களை குறிக்கும்.
3. பத்திரி காரகன் - 3 வது அதிகப்பட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம்..
3 வது மற்றும் 9 வது வீட்டுக்குரிய காரகங்களை குறிக்கும்.
4. மாத்ரு காரகன் - 4 வது அதிகப்பட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம்..
4 வது வீட்டுக்குரிய காரகங்களை குறிக்கும்.
5. புத்ர காரகன் - 5 வது அதிகப்பட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம்..
5 வது வீட்டுக்குரிய காரகங்களை குறிக்கும்.
6. ஜனத்தி காரகன் - 6 வது அதிகப்பட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம்..
6,8,12 வது வீட்டுக்குரிய காரகங்களை குறிக்கும்.
7. தார காரகன் - 7 வது அதிகப்பட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம்..அல்லது மிகவும் குறைந்தபட்ச டிகிரி அளவை கொண்ட கிரகம்
திருமணத்தை குறிப்பவன்.மனைவியின் ஆன்மாவை குறிப்பவன்.இந்த கிரகத்தின் குணநலன்களை கொண்டு மனைவியின் குணநலன்களை சுலபமாக கணிக்கலாம்.
உதாரண ஜாதகத்தில்..
1.ஆத்மகாரகன் - சுக்கிரன்
2. அமத்திய காரகன்- சனி
3. பத்திரி காரகன்- சந்திரன்
4. மாத்ரு காரகன்- செவ்வாய்
5. புத்ர காரகன் - புதன்
6. ஜனத்தி காரகன் - குரு
7. தார காரகன் - சூரியன்
தார காரகன் - சூரியன்:
இந்த ஜனன ஜாதக படி சூரியனுடைய குணநலன்களை கொண்டவள் மனைவியாக வாய்ப்பாள்.மனைவி தலைமைப்பண்பு கொண்டவள்,உஷ்ண தேகம் கொண்டவள்,மேலும் கடினமான உழைப்பாளிகளான இவர்கள் அரசாங்கத்துடன் இணக்கமாக நடந்துக்கொள்வர்.
இதே போன்று ஒவ்வொருவரின் ஜாதகத்தில் இந்த ஜெய்மினியின் காரக கிரகங்கள் மாறுபடும்.
நன்றி..
கார்த்திக்
2. அமத்திய காரகன்- சனி
3. பத்திரி காரகன்- சந்திரன்
4. மாத்ரு காரகன்- செவ்வாய்
5. புத்ர காரகன் - புதன்
6. ஜனத்தி காரகன் - குரு
7. தார காரகன் - சூரியன்
தார காரகன் - சூரியன்:
இந்த ஜனன ஜாதக படி சூரியனுடைய குணநலன்களை கொண்டவள் மனைவியாக வாய்ப்பாள்.மனைவி தலைமைப்பண்பு கொண்டவள்,உஷ்ண தேகம் கொண்டவள்,மேலும் கடினமான உழைப்பாளிகளான இவர்கள் அரசாங்கத்துடன் இணக்கமாக நடந்துக்கொள்வர்.
இதே போன்று ஒவ்வொருவரின் ஜாதகத்தில் இந்த ஜெய்மினியின் காரக கிரகங்கள் மாறுபடும்.
நன்றி..
கார்த்திக்
No comments:
Post a Comment