Saturday, 8 October 2016

ஜோதிட விளக்கம் 2


ஜோதிட விளக்கம் 2:

அனைவருக்கும் வணக்கம்,

இன்றய பதிவில் சில முக்கியமான விசயங்களை நாம் பார்க்க போகிறோம்..

சென்ற பதிவில் மேலே உள்ள ராசி கட்டத்தில் உள்ள கிரகங்கள் அந்த அந்த ராசி கட்டத்தின் அதிபதிகள் என்று சொல்லிருந்தேன் ..எதாவது சந்தேகங்கள் இருந்தால் comment  பண்ணுங்க .. நிச்சயம் அதை பற்றி விவாதிக்கலாம்..

இந்த பதிவில் கிரங்களின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்வோம் கிரங்களின் தன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம் ...

பொதுவாக ஜாதகங்களில் உள்ள கிரகங்களை பற்றி மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் ..என்ன என்ன கிரகங்கள் உள்ளன ?
சூரியன் ,சந்திரன்,புதன் ,சுக்கிரன்,செவ்வாய், குரு,சனி  இல்லையா ...மற்றும் ராகு , கேது இவை இரண்டும் நிழல் கிரகங்கள்(விரிவாக மற்றோரு பதிவில் பார்க்கலாம் )...

நீங்கள் அந்த மேலே உள்ள ராசி கட்டத்தை உற்று நோக்கினால் சூரியனுக்கும் ,சனி கிரகத்துக்கும் உள்ள தொலைவு அதிகமாக இருக்கும் அவ்வாறு இருக்கும் போது சூரியனையுடைய ஒளி சனி கிரகத்தின் மீது அமையாது என்பதை அறிவியல் ரீதியாக நம் பெரியோர்கள் காண்பித்துள்ளார் அதன் அடையாளமாகவே சனி கிரகத்தை இருள் கிரகம் என்றும் அதற்கு கருப்பு நிறம் ஆடை , எள்ளு ஆகியவற்றை படைக்கின்றனர்..ஆதாலால் நம் முன்னோர்கள் நமக்கு காண்பித்த சம்பர்தாயங்களை புறக்கணிக்காமல் அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் ஆராய்ந்து செயல் பட வேண்டும் ...இது மிகவும் முக்கியமான ஒன்று..தயவு செய்து மேலை நாட்டு கலாசாரத்தில் மூழ்கி நமது பாரம்பரியத்தை மறந்துவிடாதீர்கள் ....அப்படிப்பட்ட அந்த மேலை நாடுகளே வேதிக் அஸ்ட்ரோலாஜி என்று சொல்லப்படும் நம் முன்னோர்களின் வேதங்களையும் சாஸ்தரங்ககளையும் படித்து ஆராய்சி செய்கின்றனர்..

நமது கடவுளை தேடி இந்தியா  வருகின்றனர்...காசியில் கங்கைக்கு வந்து தலை முழுகி  புண்ணியம் தேடுகின்றனர்...

சரி பாடத்துக்கு வருவோம் ,

கிரகங்கிளின் தன்மைகள்   மற்றும் காரகங்கள்   


நவகிரகங்கள்

இந்திய ஜோதிடம் ஒன்பது முக்கிய கிரகங்களை கொண்டுள்ளது. அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு மற்றும் கேது ஆகியனவாகும்.

சூரியன்

நவகிரகங்களில் முக்கியமானதும் ஆத்ம காரகன் மற்றும் தகப்பன் காரகனும் சூரியன் ஆகும். சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் இருக்கிறது. ஒரு வருடத்தில் 12 ராசிகளையும் சுற்றி மார்ச் 21 ல் மேஷத்திற்குள் மீண்டும் வருகிறது (இந்திய ஜோதிடப்படி ஏப்ரல் 14). இதன் நட்பு கிரகங்கள் சந்திரன், செவ்வாய், வியாழன். பகை கிரகங்கள் வெள்ளி, சனி ஆகும். புதன் சம கிரகம் ஆகும். இது மேஷம் 10 பாகையில் உச்சம் பெறுகிறது, துலாம் 10 பாகையில் நீசம் பெறுகிறது, சிம்மம் 0-20 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இது ஒரு சுபாவ பாப கிரகம் ஆகும். மேலும் இதன் காரக்துவங்கள் உடல் வலிமை, தைரியம், கசப்பு சுவை, நிலம், மோட்சம், ஆத்மா, தந்தை, தந்தையின் நலன்கள், அரசன், அரச உதவி, உயர்ந்த நிலை, மன சுத்தம், அரசாங்கம், பயணங்கள், கோடை, நெருப்பு, கற்கள், புல், காடு, மலை, ஆற்றங்கரை, முகம், கோபம், தலைமை, மருத்துவர், தங்கம், தாமிரம், முத்து, மூங்கில், வெற்றி, சிவப்பு. மருத்துவத்தில் வயிறு, பித்த நீர், வலது கண், காய்ச்சல், எலும்பு, எரிச்சல், தலை நோய், வழுக்கை தலை, பித்த சம்பந்தமான வியாதி, கீழே விழுந்து காயமடைதல், காக்காய் வலிப்பு, நான்கு கால் விலங்குகளால் காயம்.

சந்திரன்

பூமியின் துணை கோள் ஆன சந்திரன் பூமியிலிருந்து சுமார் 3 லட்சம் கி.மீ தொலைவில் பூமியை சுற்றி வருகிறது. இது 29.5 நாட்களில் 12 ராசிகளையும் சுற்றிவிடுகிறது. பிறக்கும்போது சந்திரன் இருக்கும் ராசியே ஒருவரின் ஜன்ம ராசியாகும். சூரியன், புதன் இதன் நட்பு கிரகங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி சம கிரகங்கள். இது ரிஷபம் 3 பாகையில் உச்சமும், விருச்சிகம் 3 பாகையில் நீசமும், ரிஷபம் 4-20 பாகையில் மூலத்திரிகோண பலமும் பெறுகிறது. இது இயற்கை சுப கிரகமாகும் (வளர்பிறையாக இருந்தால்). இதன் காரகதுவங்கள் தாயார், தாயார் மூலம் கிடைக்கும் நன்மை, அழகு, முக காந்தம், புகழ், மகிழ்ச்சி, வாகனம், மனம், அறிவு, நகைச்சுவை, பெண்களிடம் ஈடுபாடு, நிறைவு, தூக்கம், திரவம், தண்னீர், பால், தயிர், தேன், உப்பு, சுவையான பழம், மீன் மற்றும் நீர்வாழ்வன, பாம்பு மற்றும் ஊர்வன, பூக்கள், வாசனை திரவியம், வெண்மை, துணி, வெள்ளி, பித்தளை, முத்து, அரச முத்திரை, கிணறு, ஏரி, புனிதபயணம், கூச்சம், கனிவு, காதல், கோதுமை, அரிசி, கரும்பு, உப்பு, பிராமணர்கள், வட கிழக்கு, மழை காலம், நடுத்தர வயது.

செவ்வாய்

சிகப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் சூரியனிலிருந்து நான்காவதாக உள்ளது. சூரியனிலிருந்து இதன் தொலைவு 227,900,000 கிலோமீட்டர்களாகும். இது ஒரு ராசியை கடக்க சுமார் 43 நாட்கள் ஆகிறது. இது மகரம் 28 பாகையில் உச்சமும், கடகம் 28 பாகையில் நீசமும், மேஷம் 0-12 பாகையில் மூலத்திரிகோண பலமும் பெறுகிறது. சூரியன், சந்திரன், வியாழன் இதன் இயற்கை நண்பர்கள், புதன் எதிரி, வெள்ளி, சனி சம கிரகங்கள். இது சுபாவ பாப கிரகம் ஆகும். இதன் காரகங்கள் தைரியம்,சகோதரன், வீரம், கோபம், உடல் வலிமை, ஆக்ரோஷம், போர், ஆட்சி திறமை, ஆயுதங்கள் பயன்படுத்தும் திறமை, தலைமை பண்பு, புகழ், வெற்றி, குரூரம், வாள், அறுவை சிகிச்சை, கத்தி,ஊர் தலைவன், இராணுவ தளபதி, வெப்பம், கோடை காலம், நெருப்பு, பூமி, எரிந்த இடம், தங்கம், தாமிரம், நல்ல உணவு, பேச்சு, பாம்பு, சிகப்பு, இரத்தம், கசப்பு காரம் ஆகியனவாகும்.

புதன்

இது சூரியனை சுற்றும் கோள்களில் முதலாவதாகும். அளவில் சிறிய புதன் இராசியில் சூரியனுடன் இணைந்தோ அல்லது ஒரு ராசி முன் பின்னகவோ எப்பொழுதும் இருக்கும். சூரியன் வெள்ளி இதன் நட்பு கிரகங்கள். சந்திரன் பகை கிரகம். செவ்வாய், வியழன், சனி சம கிரகங்கள். இது கன்னி 15 பாகையில் உச்சம் பெறுகிறது. மீனம் 15 பாலையில் நீச்சம் பெறுகிறது. கன்னி 16-20 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இது சுபாவ சுப கிரகம் ஆகும். இதன் காரகங்கள் கல்வி, அறிவு, இலக்கணம், கணிதம், ஜோதிடம், வான சாஸ்திரம், எழுதுதல், தத்துவ அறிவு, பேச்சு திறன், நுண்ணறிவு, பணிவு, அச்சு தொழில், அமைச்சர், வணிகம், கோவில்,குதிரை, மந்திர தந்திர சாஸ்திரம், அலி, சூத்திரர், இலையுதிர் காலம் , பச்சை நிறம், இளவரசர், இளைஞன், தாய் மாமன், தாய் வழி பாட்டன், மருத்துவர், பட்டை தீட்டுதல் (கற்களுக்கு) ஆகியானவாகும்.

வியாழன் (குரு)

நவக்கிரங்களில் மிகுந்த சுபகிரகம் குருவாகும். சூரியன், சந்திரன், செவ்வாய் இதன் நட்பு கிரகங்கள். புதன், வெள்ளி பகை கிரகங்கள். சனி சம கிரகம்.வியாழன் கடகம் 5 பாகையில் உச்சம் பெறுகிறது. மகரம் 5 பாகையில் நீச்சமும் தனுசு 0-10 பாகையில் மூலத்திரிகோண பலமும் பெறுகிறது. இது சுபாவ சுப கிரகம் ஆகும். இதன் காரகதுவங்கள் வாரிசு, பிள்ளைகள், பேரன், சிஷ்யர்கள், தனம், பொக்கிஷம், வேத பாடம், தத்துவ கல்வி,நீதி, சமஸ்கிருதம், உயர் கல்வி, ஜோதிடம், வானவியல்,இலக்கணம், மத சம்பந்தமான கல்வி, பாட்டனார், ஆசிரியர்கள், புனித இடங்கள், கூறிய அறிவு, ஞானம், எழுத்தாளர், தர்மவான், சுய கட்டுப்பாடு, தவம், நீதிபதி, வேத அறிவு, மஞ்சள் துணி, மஞ்சள் புஷ்பராகம், பசுக்கள், யானைகள், தேர், மூத்த் சகோதரர், நண்பர்கள், வட கிழக்கு திசை ஆகியவற்றை குறிக்கும்.

வெள்ளி (சுக்கிரன்)

பிரகாசமான இந்த கிரகம் வெறும் கண்களில் நன்கு தெரியக்கூடியது. சூரிய உதயதின்போதும் அஸ்தமனத்தின்போதும் அடிவானில் தென்படும். இது சுபாவ சுப கிரகம் ஆகும். புதன், சனி ஆகியவை இதன் நண்பர்கள், சூரியன், சந்திரன் இதன் எதிரிகள். செவ்வாய், வியாழன் சம கிரகங்கள். சுக்கிரன் மீனம் 27 பாகையில் உச்சம் பெறுகிறது. கன்னி 27 பாகையில் நீசம் பெறுகிறது. துலாம் 0-15 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இதன காரகதுவங்கள் மனைவி, பெண், திருமணம், மனைவியின் மூலம் இன்பம், கம களியாட்டங்கள், காதல், சோரம் போதல்,பல பெண்களுடன் தொடர்பு,அழகு, வாசனை பொருள் வியாபாரம், வேலையாட்கள்,அரச சன்மானம், ஆபரணங்கள், வைரம், பஞ்சு, கலை, இசை, நடனம், பாட்டு, கவிதை, நாடகம், வாகனம், யானை,குதிரை,பசு,வீணை,புல்லங்குழல் வாசித்தல், வசந்த காலம், தென்கிழக்கு திசை, மத்திம வயது, விவசாயம், படுக்கை அறை, வெண்மை,நெய், தயிர், தங்கம், வெள்ளி, நல்ல உணவு, வைசியர் ஆகியனவாகும்.

நவகிரகங்களில் தொலைதூரத்தில் சுற்றிவருவது சனியாகும். இது ஒரு ராசியை கடக்க சுமார் இரண்டரை வருடங்கள் ஆகின்றது. கருமை நிறத்தை குறிக்கிறது. புதன், சுக்கிரன் இதன் நட்பு கிரகங்களாகும். சூரியன், சந்திரன், செவ்வாய் எதிரிகளாகும். வியாழன் சம கிரகமாகும். இது துலாம் 20 பாகையில் உச்சம் பெறுகிறது. மேஷம் 20 பாகையில் நீசம் பெறுகிறது. கும்பம் 0-20 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இதன் காரகதுவங்கள் ஆயுள், துன்பம், நோய், தடங்கள், வருத்தம், அவமானம், அடிமை தன்மை, கோழைத்தனம், தண்டனை, அசிங்கம், அழுக்கு துணி, அலி, சட்டம் மற்றும் நீதித்துறை அறிவு, உலக இன்பங்களை வெறுத்தல், சூத்திரர்கள், பிச்சை, தீயவர்களுடன் சேர்க்கை, நாடோடி, எருமை, இரும்பு, கருப்பு நிற தானியங்கள்,சாம்பல் , விவசாயம், வேலைக்கரன் ஆக இருத்தல்.



இந்திய ஜோதிடத்தில் ராகு கேதுகள் இடம் பெறுகின்றன. மற்ற கிரகங்கள் போல் அவை பரு பொருட்கள் அல்ல. நிழல் கிரகம் அல்லது சாயா கிரகம் எனப்படும் இவை கணித புள்ளிகள் (Mathematical points) ஆகும். இது சந்திரனின் சுற்றுப்பாதை (orbit) ecliptic எனப்படும் சூரியனின் சுற்று பாதையை வெட்டும் இடமாகும். Ascending Node எனப்படும் ராகு சந்திரனின் சுற்றுவட்ட பாதை (படத்தில் நீல நிறத்தில் இருப்பது) தெற்கிலிருந்து வடக்காக ecliptic ஐ குறுக்கிடும்போது உண்டாகிறது. அதே போல் கேது எனப்படும் Descending Node சந்திரனின் பாதை வடக்கிருந்து தெற்காக ecliptic ஐ வெட்டும்போது நிகழ்கிறது. கிரகணங்கள் ஏற்படுவது இந்த சமயங்களில்தான். அமாவாசை சமயத்தில் சந்திரன் இந்த புள்ளி (node) வழியாக செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதுபோல் பெளர்ணமி சமயத்தில் சந்திரன் இந்த புள்ளியில் இருக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் வரும்போது ஏற்படுகிறது. பெளர்ணமி என்பது சந்திரன் சூரியனுக்கு 180 பாகையில் இருக்கும்போது ஏற்படுகிறது. ராகு கேதுக்கள் எப்பொழுதும் 180 பாகை இடைவெளியில் உள்ளன. மேலும் இவை எதிர் கடிகார சுற்றில் சுற்றுகின்றன.

இந்த கிரங்ககளின் காரகத்துவம் நன்றாக தெரிந்தாலே உங்கள் ஜாதகத்தில் சில விசயங்களை நீங்களே அறியலாம்...உதாரணத்திற்கு சூரியன் உங்கள் ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து பத்தாமிடத்தில் இருந்தால்..தொழில் அல்லது  வருமானம் அரசு வேலை மூலமாகவோ  ,தந்தையின் தொழில் மூலமாகவோ  அமையும்..அது எப்படி ? 

சூரியனினின் காரகத்தை படியுங்கள் , தந்தை,அரசு போன்றவை உள்ளதா ..மேலும் உங்கள் ஜாதக லக்கினத்தில் இருந்து 10 ஆம் இடம் உங்கள் தொழிலை குறிக்கும் உங்கள் தொழிலில் சூரியன் சம்மந்தம் படும் போது அதன் காரகம் அமைகிறது மேலும் ஒரு கேள்வியை நீங்கள் கேட்கலாம் அரசு வேலை கிடைத்தால் எந்த துறை கிடைக்கும் ? அதற்கு இன்னும் கொஞ்சம் ஆராய வேண்டும் அதற்கு சில நுணுக்கங்களை கையாள வேண்டும் அதாவது உங்கள் 10 ஆம் இடம் மீனம் ஆக இருந்தால் அங்கு சூரியன் இருந்தால் ஆசிரியராக அரசு வேலை கிடைக்கலாம் எப்படி ? ப்ளூ பிரிண்ட் இ பாருங்கள் மீனம் ராசியின் அதாவது அந்த வீட்டின் ஓனர் குரு அல்லவே அவருடைய தன்மைகளும் உங்கள் தொழிலில் மாற்றங்களை கொடுக்கும்  குரு,புதன் ஆசிரியரை கல்வி நிறுவனங்களை குறிக்கும் (மேலே சென்று படியுங்கள் குரு , புதன் தன்மைகளை )...உங்கள் ஜாதகத்தில் ல என்பது லக்கினம் நினைவில் கொள்க...அதிலிருந்து 10 ஆம் வீடு உங்கள் தொழிலை குறிக்கும்...

அடுத்த பதிவில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் ...நன்றி 

--------------------கார்த்திக்--------------------------------- 






1 comment: